This post is also available in: English Sinhala
இன்றைய உலகில் ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றவர்களை கவரும் வகையில் தங்களது உடலை மிகவும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். அந்தவகையில் ஏப்ஸ் (ABS) உடற்பயிர்ச்சியானது எல்லோராலும் விரும்பி செய்கின்ற ஒன்றாகும்.
இதில் அதிகமானோர் எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களால் சில சமயத்தில் சிறந்த ஒரு உடலமைப்பை பெற இயலாமல் இருக்கும். அதற்கான காரணங்களை பின்வருவனவற்றில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.
1. அதிகளவான உடல் கொழுப்பு.
சிறந்த அளவோ அல்லது சரியான அளவிலான உடல் கொழுப்பை பேணவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அந்தவகையில் சரியான கட்டமைப்பை பெற 10% அல்லது அதைவிட குறைவான உடல் கொழுப்பு சதவீதத்தைக் கொண்டிருக்கவேண்டும் (பெண்கள் 18% அல்லது அதைவிட குறைவான உடல் கொழுப்பு சதவீதத்தைக் கொண்டிருக்கவேண்டும்). அத்துடன் அதிக கொழுப்பு உணவுகளை உண்பதைத் தவிர்த்து முறையான உடல் கொழுப்பு சதவீதத்தைப் பின்பற்றினால் சரியான உடல் கட்டமைப்பினை பெறலாம்.
2. முறையான உடற்பயிற்சி.
ஏப்ஸ் (ABS) உடல் கட்டமைப்பை பெற விரும்புபவர்கள் முதலில் தேவையற்ற உடற்பயிற்சினை செய்வதை நிறுத்தி கொள்ளுங்கள். ஏனென்றால், பெருமளவான உடற்பயிற்சிகள் சரியான ஏப்ஸ் (ABS) கட்டமைப்பிற்கு உதவாததுடன் அவை பெருமளவிலான உடல் கொழுப்பினையும் குறைக்காது. இவை முற்றிலும் உடலின் கலோரிகளை குறைக்கவும் மற்றும் சரியான ஜீவத்துவ பரிமாணத்திற்குமே உதவும். எனவே சரியான மற்றும் அதிகளவிலாலான ஏப்ஸ் (ABS) உடற்பயிற்சிகளை அதிகம் செய்யுங்கள்.
3.ஒரே விதமான உடற்பயிற்சி முறையைப் பின்பற்றுதல்
நாம் நினைப்பதை விட நம் உடல் அசாத்தியமானது. நாம் செய்யும் உடற்பயிற்சி முறைகளில் மாற்றம் செய்யப்படாவிடின் உடல் அப் பயிற்சிக்கே தன்னை பழக்கப்படுத்திக் கொள்வதோடு தசை வளர்ச்சியும் தடுக்கிறது. உங்கள் வயிற்றின் கட்டமைப்பை சிறப்பாக மாற்ற 3 வகையான சிறந்த இயக்கங்களும் உடற்பயிற்சியும் காணப்படுகின்றன: வளைவு அல்லது நீட்டிப்புப் பயிற்சிகள், சுழற்சி முறை உடற்பயிற்சிகள் மற்றும் பந்துகளைப் பயன்படுத்தி சுழலுதல் அல்லது முறுக்குதல். சிறந்த வயிற்ற்றுப்பகுதிக்கான கட்டமைப்பை பெற தொடரும் பயிற்ச்சிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இறுக்கமமற்ற தசைகளை உறுதியாக்க முடியும்.
4.உங்கள் ஏப்ஸ் (ABS) மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்
ஒரு நல்ல கட்டமைப்புள்ள ஏப்ஸ் (ABS)ஐ பெற்று கொள்வதற்கு, அவர்கள் எடுக்கும் பயிற்சியில் பெரும்பான்மையான பகுதி அவர்களுடைய தசை நார்களுக்கான உடல் பயிற்சியை நோக்கியதாக இருக்க வேண்டும் என்று சில மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சிந்தனை அவர்களை அவர்கள் விரும்பிய கட்டமைப்பை பெறும் இலக்கில் இருந்து தூரத்திற்கு கொண்டு செல்லும். எனவே கூட்டு இயக்கங்கள் மற்றும் உறுதிப்படுத்தல் போன்ற உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்துவார்களாக இருந்தால், அவர்கள் 10 மடங்கு மேலதிக கலோரிகளை எரிக்கும் செயல்முறையில் அவர்களுக்கு விருப்பமான கட்டமைப்பை பெற்று கொள்ளக்கூடியதாக இருக்கும்.
5. மோசமான ஊட்டச்சத்து திட்டம்.
ஒரு சிறந்த சுய அடக்கம் உள்ள ஒருவர் கூட நீண்ட காலத்திற்கு ஒரு கடினமான உணவு கட்டுப்பாட்டை பின்பெற்றுவதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக அதை உடைத்தெறிந்து விடுவார்கள். நீங்கள் ஒரு ஊட்டச்சத்து உள்ள திட்டத்தை பின்பெற்றும் பொழுது மிகவும் குறைந்த கலோரிகள் மற்றும் கார்ப்ஸ் (calories and carbs) உணவுகளைச் சாப்பிட கூடும். ஆகவே நீங்கள் பின்பற்றும் சத்துணவு திட்டத்தில் நன்கு அவதானம் செலுத்தி போதுமான கலோரிஸ் (Calories)ஐ உள்ளேடுத்து கொள்கிறீர்களா என்று உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு குறைவான கலோரி (Calorie) உள்ள உணவு திட்டம் தான் மிதம்மிஞ்சி உண்ணுவதற்க்கான காரணம்மாக உள்ளது. எனவே தான் உங்கள் உணவு நுகர்வு, உங்கள் உடல் அளவு மற்றும் செயல்பாட்டு நிலைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். குறைந்த கலோரி நல்லது அனால் மிகவும் குறைந்த கலோரி உங்களை மிதம் மிஞ்சி உண்ணுவதற்கான ஒரு பசியை உருவாக்கி நீங்கள் விரும்பிய உடல் கட்டமைப்பை பெற்றுகொள்வதில் இருந்து எதிர் மறைவான விளைவை கொடுக்கும்.
6. நீங்கள் போதுமான நீரை அருந்துவதில்லை.
மிக துரிதமான உணவை பயன்படுத்தும் இன்றைய உலகில் நீர் சத்தை தக்க வைத்தல் என்பது மிகக் கடினமாக உள்ளது. நீங்கள் அதிகமாக சோடியம் உள்ள உணவை உட்கொள்பவர்ராகவும் மற்றும் நீங்கள் ஒரு நாளைக்கு தேவையான நீரை அருந்தாத பட்சத்தில், நீங்கள் கடினமாக பெற்று கொண்ட ஏப்ஸ் (ABS)ற்கு பாதிப்பை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு அருந்தும் நீரின் அளவை 12 குவளைகள்ளாக அதிகரித்து கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களால் வித்தியாசத்தை உணர முடியும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
7. பரம்பரை அலகுகள் இல்லை.
உங்களால் உங்களுடைய உடல் கட்டமைப்பை உருவாக்க முடியாதற்கான முக்கிய காரணம் உங்களுக்கு அதற்க்குரிய பரம்பரை அலகுகள் இல்லாமையாகும். சில மக்கள் இயற்கையாகவே வயிற்றுப் பகுதியில் கூடுதலான தொப்பை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் உடல் மெலிந்து ripped கை,கால்களை உடையவராக மாறினாலும் கூட வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்பை குறையாது. அத்துடன் உங்களுடைய பரம்பரை உங்களுடைய உடற்கட்டமைப்பை வளர்ப்பதிலும் அது எவ்வாறு உங்களுடைய உடலில் பிரதிபலிக்கிறது என்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுடைய உடற்கட்டமைப்பு பயிற்சிக்கு எதிராக உங்களுடைய பரம்பரை அலகுகள் செயட்படுமேயானால் நிச்சயமாக உங்களுடைய உடற்கட்டமைப்பை உருவாக்குவதில் போராட்டம் ஏற்படும்.
8. நீங்கள் மனரீதியாகவோ உளரீதியாகவோ மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்தால்.
தூக்கம் இல்லாமையைப் போன்று, அதிக மனஅழுத்ததினால் உங்களுடைய உடலில் கார்டிசோல் ஹார்மோன் (cortisol hormone) அதிகமாக சுரப்பதட்கான வாய்ப்பு உள்ளது அதனால் உங்களுடைய வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிக மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டும் மற்றும் Chronic பதற்றம் உள்ளவராகவும் இருந்தால், உங்களுடைய வயிற்றுப்பகுதியில் கொழுப்பு படிய விடுவது மட்டுமல்லாமல் உங்களுடைய கட்டமைப்பான தசையையும் இழப்பதட்கு நீங்களே காரணமாகுகிறீர்கள்.நீங்கள் கட்டமைப்பான ஆப்ஸ்ஐ பெறுவதற்கு உங்களுடைய மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
9.அதிகமாக மதுபானம் அருந்துவதால்.
நீங்கள் மதுபானம் அருந்துவதால் உங்களுடைய ஏப்ஸ் (ABS) கட்டமைப்பு இலக்கை முறியடிக்கிறீர்கள். உங்கள் உடலில் மதுபானம் நுழைந்தவுடன், இது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை உடனடியாக நிறுத்துகிறது, அதாவது மதுபானம் ஒவ்வொரு சிப் எடுக்கும் பொழுதும் உங்கள் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை குறைக்கிறது. அதோடு அதிகமாக மதுபானம் குடிப்பதால் இது வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு உருவாகுத்தலை ஊக்குவிக்கிறது மற்றும் அதிகப்படியான மதுபானம் குடிப்பதால் உங்கள் உடற்பயிற்சியை மிகவும் கடினமாக்குகிறது. எனவே, நீங்கள் உண்மையிலேயே உங்கள் உடலை நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மதுவை விட வேண்டும்.
10. நிச்சயமற்ற எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்தல்
உங்கள் உடல் கொழுப்பை குறைப்பது மிகவும் கடினமானது எனவே அதற்கான நேரமும் பொறுமையும் உங்களுக்கு இருப்பது அவசியமான ஒன்றாகும். உங்கள் வயிற்று பகுதியில் எந்த விதமான வித்தியசமும் உணர முடியவில்லை என்று நீங்கள் பாதியில் உங்கள் உடற்பயிற்சியை நிறுத்தி விட நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் சரியான ஊட்டச்சத்து திட்டம் மற்றும் சரியான உடற் பயிற்சிகளை பின்பற்றி வந்தால் பின்பற்றி கட்டாயம் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றாத்தை உங்களால் உணரமுடியும். அனால் உடனடியாக அந்த மாற்றங்களை பார்க்க முடியும் என்று நீங்கள் எதிர்பாக்காதீர்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர பொறுமையாகவும் மற்றும் அதற்க்கான நேரத்தையும் கொடுப்பது அவசியம்.
முடிவுரை
உங்கள் ஏப்ஸ் (ABS) கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இருக்கும் போது செய்யும் பத்து விதம்மான தவறுகள் இவைதான். நினைவில் கொள்ளுங்கள், சரியான செயல்முறை, கடின உழைப்பு, சீரான முயற்சி மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட செயன்முறைகள், உங்கள் ஏப்ஸ் (ABS)ஐ எளிதில் பெற்றுக்கொள்ள உதவுகிறது.உங்கள் ஏப்ஸ் (ABS)ஐ பெற்று கொள்ள தடையாக இருக்கும் காரணங்களை அறிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்ட சரிபார்ப்பு பட்டியல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஏப்ஸ் (ABS)ஐ உருவாகும் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Discussion about this post