This post is also available in: English Sinhala
ஜிம் இல் ஒருவர் புதிதாக சேர்வது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஏனென்றால் அப்படி சேர்பருக்கு அதிகமான குழப்பங்களும் கேள்விகளும் அவருடைய மனதில் இருக்கும்.
எவ்வளவு நேரம் நான் பயிற்சி செய்தால் போதுமானது? ஒன்றுக்கும் அதிகமான உபகரணங்களை ஒரே தடவையில் பயன்படுத்தலாமா? இன்னும் ஒருவர் ஒரு உபகரணத்தை பயன்படுத்தும் பொழுது அவர் எப்பொழது முடிப்பார் என்று கேட்க முடியுமா? என்று பல குழப்பங்களும் கேள்விகளும் தோன்றும்.
இது போன்ற கேள்விகளுக்கு சரியான தீர்வை பெற்று அந்த இடத்தில் எமது பயிற்சிகளை எந்த வித சிக்கலும் இன்றி சரிவர செய்துவிட்டு திரும்ப வேண்டும் என்றால் நாம் சில அடிப்படை விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படை விதிகள் நாம் எமது பாலர் பாடசாலைகளில் கற்ற சில அடிப்படையான வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில விடையங்கள் தான் பயிற்சிகள் முடிந்த பின் சுத்தம் செய்துகொள்வது, மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது போன்ற சில அடிப்படை விடையங்களை செய்தாலே போதும்.
இருப்பினும் கீலே தரப்பட்டுள்ள 10 விடயங்களையும் நீங்கள் ஜிம்முக்கு செல்லும் பொழுது கடைபிடித்தால் உங்களுக்கும் அங்கே வருகை தரும் மற்றவர்களுக்கும் ஒரு சிறந்த சூழலை இது ஏற்படுத்தும் மட்டுமல்லாது யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்கவும் உதவும்
1. உங்கள் சக பயிற்சியாளர்களை கேலி செய்தல் கூடாது
எப்பொழுதும் உங்கள் சக பயிற்சியாளர்களை கேலி கிண்டல் செய்தல் கூடாது. அவர்கள் ஒரு விடையத்தை சரியாக செய்யாதவாறு உங்களுக்கு தோன்றினாலோ அல்லது அவர்கள் அணியும் ஆடை அவர்களுக்கு பொருத்தமில்லாமல் இருப்பது போயன்று நீங்கள்
உணர்ந்தாலோ அதை கேலி கிண்டல் செய்தல் கூடாது. அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் அவர்களது புகைப்படங்களுக்கு தவறான கருத்துக்களை பதிவு செய்யவும் கூடாது. இது ஜிம்மில் மாத்திரம் அல்லது எமது அன்றாட வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான விடையம் .
2. பயன்படுத்திய உபகரணங்களை சுத்தம் செய்தல்
உங்களுக்கு அதிகமாக வியர்க்காவிட்டாலும் நீங்கள் பயன்படுத்திய உபகரணங்களை அடுத்தவர் பயன்படுத்தும் பொழுது ஒரு ஈரலிப்பை உணரக்கூடும். அதனால் ஒரு துணியை கொண்டு எப்பொழுதும் நீங்கள்பயன்படுத்திய உபகரணங்களை சுத்தம் செய்யுங்கள். இன்னுமொருவர் பயன்படுத்திய உபகரணத்தை நீங்கள் பயன்படுத்தும் போது ஏதேனும்
ஈரலிப்பை உணர்ந்தால் அதனையும் சுத்தம் செய்யுங்கள்.இது ஒரு நல்ல நடத்தைக்கு உதாரணமாகும்.
3. எப்போதும் அனுமதி கேளுங்கள்
உங்கள் சக பயிற்சியாளர் ஒரு உபகரணத்தை பாவித்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது உங்களுக்கு தேவைப்பட்டால் அவரிடம் அனுமதி கேட்டுவிட்டு அதை எடுக்க செல்லுங்கள். அப்படியில்லாமல் அனுமதியின்றி அவர்களை கடந்து செல்வது ஒரு தவறான முறையாகும்.
இப்படி செய்வது அந்த நபருக்கு ஆபத்தை ஏட்படுத்தும். அவர் ஒரு பாரத்தை சுமந்து பயிற்சி செய்யும் பொழுது நீங்கள் அவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவரை கடந்து செல்வது அவருக்கு இடையூறையும் அதே சமையம் ஆபத்தையும் விளைவிக்கக்கூடும்.
4. உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நீங்கள் உபகரணங்களை பயன்படுத்தும் பொழுது உங்களுக்கே அனைத்தும் சரிவர கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் தோணலாம். ஆனால் எப்பொழுதும் உங்கள் சக பயிற்சியாளர்களுக்கு உபகரணங்கள் பயன்படுத்த கிடைக்கிறதா என்றும் அவதானித்துக்கொள்ளுங்கள். அதிகமானோர் இல்லாத வேளையில் நீங்கள் உபகரணங்களை விரும்பியபடி பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் அதிகமானோர் உள்ள பொழுது அவர்களோடு உபகரணங்களை பகிர்ந்து பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
5. உங்கள் முணுமுணுத்தலை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்
நீங்கள் அதிகமான சுமையை சுமக்கும் பொழுது உங்களை அறியாமலே சில முணுமுத்தலோ அல்லது சத்தமோ ஏட்படலாம். இதை இயலுமானவரை குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு சுமையை சுமக்கிறீர்கள் என்பது உண்மைதான் இருப்பினும் நீங்கள் ஏட்படுத்தும் சத்தம் மற்றவர்களுக்கும் இடையூறை ஏட்படுத்தும் என்பதில் கவனம் கொள்ளுங்கள்.
6. நீங்கள் பயன்படுத்தாத சந்தர்ப்பங்களில் உபகரணங்களை தவறாக உபயோகிக்க வேண்டாம்
நீங்கள் உடற்பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்தாத சந்தர்ப்பங்களில் அதன் மேல் அமர்ந்து கொண்டிருப்பது உகந்ததல்ல. இது ஒரு பெஞ்சாக இருக்கலாம், ஆனால், நீங்கள் உங்கள் தொலைபேசியை உபயோகிப்பதற்காக வேண்டி அதன் மேல் அமர்வதை தவிர்த்து கொள்ளவும். இன்னுமொரு நபருக்கு அந்த பெஞ்ச் தேவைப்படலாம், மேலும் உங்களை நகரும்படி சொல்வதற்கு அவர்கள் சங்கடமாக உணரக்கூடும். நீங்கள் உண்மையிலேயே உட்கார வேண்டியிருந்தால், லாக்கர் அறை அல்லது லவுஞ்ச் பகுதி போன்ற பகுதிகளை அமர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
7. செல்பி புகைப்படங்கள் எடுப்பதனை தவிர்த்துக்
கொள்ளவும்
உங்கள் தசைகளை உருவாக்க நீங்கள் செய்கிற கடின உழைப்பைப் பற்றி பெருமிதம் கொள்வது முற்றிலும் சரியே. ஆனால், நீங்கள் சிறந்த புகைப்படங்களை எடுப்பதற்காக வேறொருவரின் உடற்பயிற்சி செய்யவிருக்கும் சாதனங்களை பிடித்துக்கொண்டு அவர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். விரைவான புகைப்படம் ஒன்றினை எடுத்துக் கொண்டு தங்கள் உடற்பயிற்சியினை தொடருங்கள். நீங்கள் அதிர வைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பதனை ஏற்கனவே அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றனர்
8. கோரப்படாத ஆலோசனையை வழங்குவதைத் தவிர்க்கவும்
குழப்பமாகவோ அல்லது அதிக அழுத்தத்துடனோ காணப்படும் புதிய உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்க முற்படாதீர்கள். நீங்கள் உதவியாக இருக்க தான் முயற்சிக்கிறீர்கள், ஆனால் கேட்காத ஆலோசனைகளை அவர்களுக்கு அந்நியர்கள் வழங்குவதனை அவர்கள் விரும்பாதவர்களாக இருக்கக்கூடும். உடற்பயிற்சியின் போது எவருக்கேனும் ஆபத்து அல்லது உடனடி தேவை இல்லாவிட்டால் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டாம். மேலும், ஒரு சக உறுப்பினர் செய்யும் உடற்பயிற்சியின் எண்ணிக்கையைப் பற்றி உங்களுக்கு ஒரு கருத்து இருந்தால், அவர்கள் உங்கள் அறிவுரையைக் கேட்காவிட்டால் உங்கள் ஆலோசனையை நீங்களே வைத்திருங்கள்.
9. ஜிம் கருவியை உரிய இடங்களில் வைத்திருங்கள்
ஜிம்மில் டம்ப்பெல் கருவிகளை ஒரு சிட்-அப் பெஞ்ச் தடுத்து வைத்திருப்பதை நீங்கள் எப்பொழுதாவது பார்த்ததுண்டா? அதற்கு வாய்ப்பே இல்லை! டெட்லிஃப்ட் இயக்கத்தினை மேற்கொள்வதற்காக ஒரு சிட்-அப் பெஞ்சை இழுக்காதீர்கள், டெட்லிஃப்ட் இயங்குதளங்களைத் தவிர வேறு எங்கும் பளு தூக்குதல் இயக்கங்களை செய்யாதீர்கள். மற்றும் குந்து ரேக்குகளில்
பிளைமெட்ரிக் பெட்டிகளை விட வேண்டாம். சாதனங்களை தவறாக இடங்களில் வைக்க வேண்டாம். உபகரணங்களைப் பயன்படுத்திய பிறகு அதன் உரிய இடங்களில் மீண்டும் வைக்கவும்.
10. அனாவசிய அரட்டைகளை தவிர்க்கவும்
பலருக்கும் உடற்பயிற்சி கூடம் ஆறுதலளிக்கும் ஒரு இடமாகும், உடற்பயிற்சி கூடம் ஒரு சமூக அமைப்பாக இருந்தாலும், உங்கள் வதந்திகளை குறைந்தபட்சமாக வைக்க முயற்சி
செய்யுங்கள். ஒருவேளை, நீங்கள்இன்னொருவருக்கு உடற்பயிற்சிகளில் துணையாகவோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் செல்ல நேர்ந்தால் சக உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். மேலும், நினைவில் கொள்ளுங்கள், ஒரு சக உடற்பயிற்சி உறுப்பினர் ஹெட்ஃபோன்கள் அணிந்திருந்தால், அவர்கள் வொர்க்அவுட்டின் போது அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று அர்த்தம். எனவே, அவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும்.
முடிவுரை
ஆகவே இந்த ஜிம் விதிகள் அனைத்தும் “மற்றவர்களைக் கருத்தில் கொண்டு மரியாதையுடன் இருங்கள்” என்ற ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன. நாம் அனைவரும் அதைப் பின்பற்றினால், ஜிம்மை மிகவும் பாதுகாப்பான மற்றும் நட்பான இடமாககொண்டு செல்லலாம். நினைவில் கொள்ளுங்கள், இவ்வுலகை போலவே, நாங்கள் ஒன்றாக ஜிம்மைப் பகிர்ந்து கொள்கிறோம், எனவே இதைப் போலவே தொடர்ந்து செயல்படுவோம், மற்றவர்களிடம் கருணை காட்டுவோம்! பட்டியலில் உள்ள முக்கியமான ஜிம் ஒழுங்கு விதிகளில் நான் எதையேனும் தவற விட்டிருந்தால், கருத்துகளில் அவற்றை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
Discussion about this post