This post is also available in: English Sinhala
புரத மிருதுவாக்கிகள் சிறப்பானவை இல்லையா? ஆம், அவை சுவையானவை, ஆரோக்கியமானவை, விரைவானவை மற்றும் எளிதானவை ஆகும். பல்வேறு பழ ரெஸிபீஸ்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமலும் அதிகளவு சர்க்கரைகளையும் கொண்டிருந்தாலும் அதிகமான பழ மிருதுவாக்கள்கள் ஆரோக்கிய உணவு உண்பவர்களுக்கு ஒரு கனவாக இருக்கும். இதை நம்புங்கள் அல்லது நம்பாமல் இருங்கள். சரியான நேரத்தில், சரியான பொருட்களின் கலவையுடன் சரியான அளவு உயர் புரத மிருதுவாக்கிகள் உங்களது மெலிந்த தசைகளை கட்டமைத்து சரி செய்யலாம். அது உங்களுக்கு முழுமையான திருப்தியையும் உணர வைக்கும். மேலும் (பசி சம்பந்தமான ஹோர்மோன்கள்) கிரிகெலின் அளவைக் குறைக்க உதவும்.
ஒரு மிருதுவாக்கியில் புரதத்தைச் சேர்ப்பது மிகவும் சீரான உணவுத் தேர்வாகும். இன்னும், புரதம் உங்களுடைய செரிமானத்தைச் சீர்படுத்தும். மேலும் உங்கள் உடலில் சர்க்கரை கூர்முனைகள் மற்றும் செயலிழப்புகளைத் தடுக்க உதவும்.
நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சுவையான புரத மிருதுவாக்கிகளைத் தேடுகிறீர்களானால் உங்களது சுவையும், வயிற்றையும் திருப்திப்படுத்த ஊட்டச்சத்து நிறைந்த இந்த 5 உயர் புரத பழ மிருதுவாக்கிகளில் ஒன்றை முயற்சித்துப் பாருங்கள்.
1.ஆப்பிள் மற்றும் சிறந்த தானியங்கள் சேர்த்த கலவை.
ஆப்பிள் மற்றும் சிறந்த தானியங்கள் சேர்த்த கலவை என்பது ஆற்றலை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானமாகும். இது உண்மையான அளவிலான அத்தியாவசியப் புரதத்தைக் கொண்டுள்ளது. இது உங்களது உடலுக்கு கனமான வேர்கவுடின் பின்னரோ, பரபரப்பான தினசரி வேலைகளின் பின்னரோ தேவைப்படுகிறது. இந்த ஆரோக்கியமான கலவை ஐசி ஆப்பிள் பையிஃ போன்ற கலவையைக் கொண்டுள்ளது. எளிமையாக கலத்தல் மூலம் இந்த ஆரோக்கியமான உயர் புரத மிருதுவாக்களை சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
• 12 அவுன்ஸ் தண்ணீர், பால் அல்லது தயிர்.
• 2 ஸ்கூப்ஸ் வெண்ணிலாப் புரதத் தூள்.
• தோள் அகற்றப்பட்டு வெட்டப்பட்ட ஒரு ஆப்பிள்.
• 1 கப் கீரை.
• 2 தேக்கரண்டி பாதாம்.
• ¼ சமைக்காத ஓட்ஸ்.
• (விரும்பினால்) சுவைக்கு கருவப்பட்டை.
• தேவைக்கேற்ப ஐஸ்.
ஊட்டச்சத்துக்கள்
• கலோரி: 535
• கொழுப்பு: 3 கிராம்
• கார்போஹைட்ரேட்: 46 கிராம்
• புரதம்: 58 கிராம்
• ஃஐபபர்: 9 கிராம் (தண்ணீரைத் திரவமாகப் பயன்படுத்துவதற்கான கணக்குகள்)
உள்ளீடுகள்: BuyFresh.lk | Saarakeetha.com | Your local shop
2.வெண்ணிலா பூசணிப் புரத மிருதுவாக்கி.
இந்தப் பூசணிப் புரதக் கலவை நல்ல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக கலவையும் கொண்டதாகும். இந்த அடர்த்தியான, க்ரீமியான, ஆரோக்கிய புரத பூசணிக் கலவை உங்களது உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கும் போது உங்களது எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்துவது உறுதியானது.
தேவையான பொருட்கள்:
• 12 அவுன்ஸ் தண்ணீர், பால் அல்லது தயிர்.
• 2 ஸ்கூப்ஸ் வெண்ணிலா கலவைப் புரதத் தூள்.
• 4/3 கப் ஆர்கனிக் ப்யூரிட் பூசணி.
• க்ரவுண்ட் ஆள் விதைகள் 1 தேக்கரண்டி.
• 1 கப் சமைக்காத ஓட்ஸ்.
• (விரும்பினால்) சுவைக்கு கருவப்பட்டை மற்றும் வெண்ணிலா மிருதுவாக்கி.
• தேவைக்கேற்ப ஐஸ்.
ஊட்டச்சத்துக்கள்:
• கலோரி: 535.
• கொழுப்பு: 13 கிராம்.
• கார்போஹைட்ரேட்: 45 கிராம்.
• புரதம்: 60 கிராம்.
• ஃப்பைபர்: 13 கிராம்(தண்ணீரைத் திரவமாகப் பயன்படுத்துவதற்கான கணக்குகள்)
உள்ளீடுகள்: BuyFresh.lk | Saarakeetha.com | Your local shop
3.ட்ரொபிகல் பவர் கலவை.
இந்த குளிர்ச்சியான மற்றும் புத்துணர்வூட்டும் ட்ரொபிகள் பவர் கலவையானது உங்களை எழுப்பி உங்களது நாளைச் சிறப்பாகத் தொடங்குவதற்கு உதவும்! இது சுவையான அன்னாசி மற்றும் ட்ரொபிகல் தேங்காயின் க்ரீம் இனிப்புச் சுவை போன்றவற்றை கொண்டிருக்கும். இது காலை உணவை முழுமையாகச் சாப்பிட சிறந்த புரத மிருதுவாக்கி ஆகும்.
தேவையான பொருட்கள்:
• 12 அவுன்ஸ் தண்ணீர், பால் அல்லது தயிர்.
• 2 ஸ்கூப்ஸ் வெண்ணிலா சுவையான புரதத் தூள்.
• வாழைப்பழம்.
• 1கப் அன்னாசி.
• 1கப் கீரை.
• க்ரவுண்ட் ஆளி விதைகள் 1 தேக்கரண்டி.
• 2 தேக்கரண்டி இனிக்காத தேங்காய் பூ.
• ½ கப் வெற்றுத் தயிர் அல்லது சைவ மாற்று.
• தேவைக்கேற்ப ஐஸ்.
ஊட்டச்சத்துக்கள்:
• கலோரி: 525.
• கொழுப்பு: 12 கிராம்.
• கார்போஹைட்ரேட்: 4 கிராம்.
• புரதம்: 58 கிராம்.
• ஃப்பைபர்: 8.5 கிராம். ( தண்ணீரைத் திரவமாகப் பயன்படுத்துவதற்கான கணக்குகள்)
உள்ளீடுகள்: BuyFresh.lk | Saarakeetha.com | Your local shop
4.ஆரஞ்சுக் கிரீம்சிகல்.
ஆரஞ்சுக் கிரீம்சிகல் என்பது உங்களது காலை உணவில் காலை ப்ரென்ச் மெனுவில் சேர்க்க முடியுமான மிகவும் சுவையான புரதப் பானம் ஆகும். இந்தப் புரத மிருதுவாக்கலை செய்வதற்கு சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய ஆரஞ்சுத் துண்டுகளால் அதை அலங்கரித்து உங்களது வாழ்வின் நேரத்தையும் மீதிப்படுத்திக் கொள்ளுங்கள்.!
தேவையான பொருட்கள்:
• 1கப் தண்ணீர்.
• 1 ஸ்கூப் வெண்ணிலா புரதத் தூள்.
• 1 ஆரஞ்சு.
• ¼ ஆரஞ்சு தலாம்.
• 2 தேக்கரண்டி ஆளி விதைகள்.
• ½ ஆரஞ்சு சாறு.
• தேவைக்கேற்ப ஐஸ்.
ஊட்டச்சத்துக்கள்:
• கலோரி: 399
• கொழுப்பு: 14 கிராம்.
• கார்போஹைட்ரேட்: 39 கிராம்.
• புரதம்: 32 கிராம்
உள்ளீடுகள்: BuyFresh.lk | Saarakeetha.com | Your local shop
5.கோடைக்கால ப்ளாஸ்ட்.
தர்பூசணி, புதினா மற்றும் அன்னாசியின் சேர்க்கை இந்த தர்பூசணி ப்ளாஸ்ட் மிருதுவாக்கியை கோடைக்காலத்திற்கான ஏற்றவகையான பானமாக மாற்றுகிறது! நிச்சயமாக இது கோடைக்காலத்தில் அருந்துவதற்கு சிறந்த ஆரோக்கியமான, புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய சைவ பானங்களில் ஒன்றாகும்.
தேவையான பொருட்கள்:
• 2/3 கப் விதையற்ற தர்பூசணி.
• 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.
• ½ கேண்டலூப்.
• 1 வாழைப்பழம்.
• ¼ கப் அன்னாசி.
• 4-5 புதிய புதினா இலைகள்.
• தேவைக்கேற்ப ஐஸ்.
ஊட்டச்சத்துக்கள்:
• கலோரி: 182.
• கொழுப்பு: 1கிராம்.
• கார்போஹைட்ரேட்: 47 கிராம்.
• புரதம்: 3 கிராம்.
• ஃப்பைபர்: 5 கிராம்.
உள்ளீடுகள்: BuyFresh.lk | Saarakeetha.com | Your local shop
மேலதிக உதவிக் குறிப்புகள்.
நீங்கள் உணவுக்காகப் புரத மிருதுவாக்கலை செய்கிறீர்கள் என்றால் குறைந்தது 25 கிராம் புரதத்தை நோக்கமாகக் கொள்ளுங்கள். மேலதிகமான சிற்றுண்டிக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட கிராம் சிறந்தது.
முடிவுரை
உங்களது கலப்பான் மூலம் இதைச் செய்யத் தயாரா? ஆமாம், இந்த 5 வகையான உயர் புரத மிருதுவாக்கல்களுக்காக அதை சுற்றவைப்பதால் பிரயோசனம் தான் கிடைக்கும்.அவை சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் உங்களது உடற்பயிற்சியை பராமரிக்கவும் சீரான கட்டுப்பாட்டைக் கொடுக்கும். இதை மிகவும் எளிமையாகச் செய்யலாம் என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள்? பிரயோசனமான உயர் புரத மிருதுவாக்கல்களை நீங்களே செய்து கொள்ளுங்கள்.
Discussion about this post